கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார்
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார்
கயத்தாறு:
கயத்தாறு அருகேயுல்ள நாகம்பட்டி நடுத்தெருவை ேசர்ந்தவர் செல்லையா (வயது 55). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு சென்றார். அங்கு விவசாயத்திற்கு தேவையான பூச்சிமருந்துகளை வாங்கிக்கொண்டு நாகம்பட்டிக்கு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிர்திசையில் கோவில்பட்டியிலிருந்து வாகைகுளத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் அருகே செல்லையா மற்றும் ஐயப்பன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்லையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் கிடந்த ஐயப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலியான செல்லையா உடலை கயத்தாறு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.