கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2021-11-11 13:46 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் கிராமத்தை சேர்ந்த யாதவ சமுதாய தலைவர்கள் கே.செல்வராஜ், ஆர்.கோபால், செயலாளர்கள் கே.தாமோதர கண்ணன், கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-
நாலாட்டின்புதூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் யாதவ சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும், எங்கள் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். எங்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை நாங்களே பேசி சமாதானம் செய்து கொள்வோம். ஆனால் நாலாட்டின்புதூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தீண்டாமை வழக்குகளை பதிவு செய்ய தூண்டிவிடுகிறார். கிராமத்தில் ஒற்றுமையை குறைத்து, ஜாதி பிரச்சினைக்கு வழிவகுக்கிறார். அந்த போலீஸ் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையேல் நவ.23-ந் தேதி நாலாட்டின்புதூர் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டிச.2-ம் தேதி காலை 10 மணிக்கு உங்களிடம்(உதவி கலெக்டரிடம்) எங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம், என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்