குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது விமான கழிவறையில் புகைபிடித்தவர் கைது

குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது விமான கழிவறையில் புகைபிடித்தவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-11 07:47 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் 137 பயணிகள் வந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது ஆந்திர மாநிலம் கடப்பா சைபேட்டா கிராமத்தை சேர்ந்த வெங்கடராமையா (வயது 50) என்பவர் விமானத்தில் உள்ள கழிவறைக்கு சென்று, அங்கு திடீரென சிகரெட் புகைத்தார்.

இது பற்றி விமானியிடம், விமான பணிப்பெண்கள் புகார் செய்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் வெங்கடராமையாவை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடராமையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்