சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம் - மாநகராட்சி அறிவிப்பு
மழை பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் நிலையில் 15 மண்டலங்களுக்கும் பின்வரும் 15 பொறியாளர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருவொற்றியூர் - எஸ்.தேவேந்திரன் (9445467372), மணலி - எஸ்.காளிமுத்து (9445190016), மாதவரம் - டி.சரவணபவனந்தம் (9445190735), தண்டையார்பேட்டடை - எஸ்.ராஜேந்திரன் (9445190734), ராயபுரம் - ஜெயராமன் (9445190739), திரு.வி.க.நகர் - எம்.பரந்தாமன் (9498020735), அம்பத்தூர் - கே.விஜயகுமார் (9445190738), அண்ணா நகர் - ஆர்.பாலசுப்பிரமணியம் (9445190733).
தேனாம்பேட்டை - பி.வி.பாபு (9445190852), கோடம்பாக்கம் - ஜி.வீரப்பன் (9499956220), வளசரவாக்கம் - சக்தி மணிகண்டன் (9445190017), ஆலந்தூர் - என்.மகேசன் (9445190200), அடையாறு - எல்.நந்தகுமார் (9445190500), பெருங்குடி - துரைசாமி (9499956219), சோழிங்கநல்லூர் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (9445190732).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.