தர்மபுரி அருகே ரெயில் மோதி டிரைவர் பலி
தர்மபுரி அருகே ரெயில் மோதி டிரைவர் பலியானார்.
தர்மபுரி:
தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று புலிக்கரை பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.