கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1104 மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1104 மதுபாட்டில்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-11 00:56 GMT
ஓசூர்:
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,104 மதுபாட்டில்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது.
இந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 1,104 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 
டிரைவர் கைது
இதனைத்தொடர்ந்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (வயது26) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் காருடன் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்