தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்தன

திருக்கனூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

Update: 2021-11-10 19:53 GMT
திருக்கனூர், 

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த  ஒருவார காலமாக இடைவிடாமல் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.இதனால் திருக்கனூர் பகுதியில் உள்ள செட்டிப்பட்டு ஏரி நிரம்பி வழிகிறது. மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படாததால் ஏரிக்கரையோரம் பயிரிடப்பட்டு  இருந்த  சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

மணலிப்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.பாகூர், சோரியாங்குப்பம், குருவி நத்தம், மடுகரை, நெட்டப்பாக்கம்,        வில்லியனூர், பகுதிகளிலும் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாயின.

கனமழை காரணமாக திருக்கனூரை அடுத்த கொடாத்தூர் புதுநகரை சேர்ந்த சக்கரபாணி (வயது45), தொழிலாளி வெங்கடேசன் ஆகியோரது  வீடுகள் இடிந்து விழுந்தது.

சோம்பட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் கூரை வீடும், முருகன் என்பவரின் வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது.

மேலும் செய்திகள்