மதுபான கடைகளில் கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
மதுபான கடைகளில் கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.;
புதுச்சேரி, நவ.11-
புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் நகரப்பகுதியில் உள்ள மதுபான கடைகள் மற்றும் குடோன்களில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் நேற்று கலால் துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினார்கள். நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், குடோன்களில் கலால் துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது.