தந்தையை காப்பாற்ற சென்ற பஸ் கண்டக்டர் தீயில் கருகி சாவு

தந்தையை காப்பாற்ற சென்ற பஸ் கண்டக்டர் தீயில் கருகி சாவு;

Update: 2021-11-10 19:52 GMT
சூரமங்கலம், நவ.11-
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையை காப்பாற்ற முயன்ற பஸ் கண்டக்டர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
சேலம் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடிசை வீடு
சேலம் திருமலைகிரி அடுத்துள்ள முருங்கபட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 95). இவருடைய மகன் வனசெழியன் (வயது 51). அரசு பஸ் கண்டக்டர். பச்சமுத்து குடிசை வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்தார்.
சம்பவத்தன்று பச்சமுத்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதைன அறிந்த வனசெழியன் பதறி துடித்தார். தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று, பற்றி எரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தார்.
தீயில் கருகி சாவு
அங்கு கட்டிலில் படுத்து இருந்த தந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது வனசெழியனும், பச்சமுத்துவும் தீயில் கருகினர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பச்சமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வனசெழியன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீ விபத்தில் தந்தையை காப்பாற்ற சென்ற பஸ் கண்டக்டர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்