வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி
விருதுநகரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 1,600 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 3,000 வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். நேற்று முதல் கட்டமாக 1,000 கட்டுப்பாடு எந்திரங்களையும், 2,000 வாக்குப்பதிவு எந்திரங்களையும் சரிபார்க்கும் பணியை பெல் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடங்கினர். இதனை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகரன், நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.