2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று முன்தினம் செந்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும்படியாக சரக்கு ஏற்றி வந்த 2 மினி சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசியை குருணையாக மாற்றப்பட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோக்களை ஓட்டிவந்த செந்துறை தாலுகா நின்னியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், மருதூர் கிராமத்தை சேர்ந்த சிவபெருமாள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், குருணை அரிசியானது குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், மருதூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் ஆகியோருடையது என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதனை குருனையாக அரைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக சரக்கு ஆட்டோக்களில் கடத்தி வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் பாண்டியன், சிவபெருமாள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2,350 கிலோ குருணை அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.