சேலம் ெரயில்வே கோட்டம் ரூ.152½ கோடி வருவாய் ஈட்டியுள்ளது

சேலம் ெரயில்வே கோட்டம் ரூ.152½ கோடி வருவாய் ஈட்டியுள்ளது

Update: 2021-11-10 19:48 GMT
சூரமங்கலம், நவ.11-
சரக்கு மற்றும் பார்சல் மூலம் நடப்பு ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.152½ கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரக்கு மற்றும் பார்சல்
சேலம் ரெயில்வே  கோட்டத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் பார்சல் மூலமாக கிடைக்கும் வருவாய் ரெயில்வே  நிர்வாகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி கடந்த ஏப்ரல்- அக்டோபர் (2021) மாதம் சேலம் ரெயில்வே  கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் 15 லட்சத்து 39 ஆயிரத்து 400 டன் சரக்கு அனுப்பி வைத்து ரூ.140 கோடியே 61 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்- அக்டோபர் மாதம் 13 லட்சத்து 12 ஆயிரத்து 509 டன் சரக்கு அனுப்பி வைத்ததன் மூலம் ரூ.112 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டி இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் -அக்டோபர் மாதம் சரக்கு அனுப்பி வைத்ததை விட, இந்த நிதி ஆண்டு ஏப்ரல் -அக்டோபர் ஆகிய 7 மாதத்தில் சரக்கு அனுப்பி வைத்தது 17.29 சதவிகிதம் கூடுதலாகும். இதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல்- அக்டோபர் மாதத்தின் வருவாய் 25.51 சதவிகிதம் என்பது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். இந்த சரக்கு போக்குவரத்து மூலமாக பெட்ரோலியம், சிமெண்ட், இரும்பு, கன்டெய்னர்ஸ் கோதுமை, தானியங்கள் அனுப்பப்பட்டது,
கடந்த ஆண்டை விட கூடுதல்
இதேபோல் சேலம்ரெயில்வே  கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் -அக்டோபர் (2021) மாதம் 21 ஆயிரத்து 255 டன் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.12 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டு (2020) ஏப்ரல்- அக்டோபர் 15 ஆயிரத்து 91 டன் பார்சல் அனுப்பப்பட்டது, இதன் மூலம் ரூ.8 கோடியே 65 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக 40.84 சதவிகிதம் பார்சல் கூடுதலாக அனுப்பப்பட்டு 43.48 சதவிகிதம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே  கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

மேலும் செய்திகள்