சாமி சிலைக்கு உடைப்புக்கு நீதி கேட்டு போராடிய 4 பேர் கைது

சாமி சிலைக்கு உடைப்புக்கு நீதி கேட்டு போராடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-10 19:43 GMT
பெரம்பலூர்
சிறுவாச்சூரில் தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கு நீதி கேட்டும் இந்து முன்னணியினர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு அந்த அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகர் தலைமையில், பெரம்பலூர் நகர தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் 2 பேர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிறுவாச்சூரில் தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்படும் இச்சம்பவத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்?, இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குணசேகர், கண்ணன், மகேந்திரன், ராமசாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்