மாணவனுக்கு பாலியல் தொல்லை

மாணவனுக்கு பாலியல் தொல்லை காடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2021-11-10 19:36 GMT
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டம், செம்பியக்குடியை சேர்ந்தவர் ஞானம். இவர், கடந்த 2018-ம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்த மாணவன் ஒருவருக்கு பாலியல் தால்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால், அந்த மாணவன் தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஞானம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஆனந்தன், ஞானத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதனையடுத்து ஞானத்தை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்