அரசுபஸ்சின் அடியில் சிக்கிய வாலிபர்கள் உயிர் தப்பினர்

அரசுபஸ்சின் அடியில் சிக்கிய வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Update: 2021-11-10 19:35 GMT
துறையூர்
துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ரவுண்டானா பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சகதியாகவும் உள்ளது.  இந்நிலையில் நேற்று பெரம்பலூர் சாலையில் விரிவாக்கப் பணி நடைபெறும் பகுதியில் மழைநீரால் சூழப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது. இதைப் கவனிக்காமல் மொபட்டில் வந்த வாலிபர்கள் அந்த பள்ளத்தில் விழுந்தனர். இதனிடையே அரசு பஸ் வந்ததது. அப்போது, பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர்கள் சிக்கினர். அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் அந்த வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதேபோன்று அந்த வழியாக வந்த கார் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குழியில் இறங்கியது. எனவே அந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்