மின்சாரம் தாக்கி ஒலிபெருக்கி உரிமையாளர் பலி

ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒலிபெருக்கி உரிமையாளர் பலியானார்.

Update: 2021-11-10 19:34 GMT
ராதாபுரம்:

ராதாபுரம் அருகே துரைகுடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வன் (வயது 54). இவர் திருமண வீடு, கோவில் கொடை விழா போன்ற இடங்களுக்கு ஒலிபெருக்கி மற்றும் சீரியல் செட் அமைத்துக் கொடுத்து தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக திருமண மண்டபத்தில் சீரியல் செட் அமைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்த அந்தோணி செல்வனை மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ராதாபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்