வயல்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
வயல்களில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
பனைக்குளம்
தொடர் மழையால் வயல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
வயல்களில் தண்ணீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய் வலசை, மானாங்குடி, இரட்டையூரணி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளன. வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று முழுவதும் மழை பெய்யாததால் நெல் பயிர்களை சூழ்ந்துள்ள மழை நீர் குறைந்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக மண்டபத்தில் வடக்கு மற்றும் தெற்கு கடல்பகுதியில் 500-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிக்க தடை
அது போல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களிலும் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 800-க்கும் அதிகமான விசைப்படகு மற்றும் 700-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 3 நாட்களாகவே துறைமுக கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.