‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-11-10 18:23 GMT
சாலை சீரமைக்கப்படுமா?
பழனியில் இருந்து பெரிய கலையம்புத்தூருக்கு செல்லும் வழியில் நெய்க்காரப்பட்டியில், சாலையில் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே பள்ளத்தை முழுமையாக மூடி சாலையை சீரமைக்க வேண்டும். 
-மணிகண்டன், பெரியகலையம்புத்தூர்.

அபாய மின்கம்பம் 
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் எம்.அம்மாபட்டியில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் நிற்கிறது. மழைக்காலமாக இருப்பதால் கனமழை அல்லது பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பிரபு, எம்.அம்மாபட்டி.

சேறும், சகதியுமான சாலைகள்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றும் இதுவரை முடியவில்லை. இதனால் கோவிந்தராஜ்நகர் இணைப்பு சாலை, முனியப்பன் கோவில் சாலை ஆகியவை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. தற்போது மழை பெய்வதால் அந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சாலைகளை சீரமைக்க வேண்டும். 
-பாரி, பாலகிருஷ்ணாபுரம்.

சுகாதாரக்கேடு அபாயம் 
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் அமைந்து உள்ள பாறைப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதற்கு நடுவே இறந்த பன்றியின் உடலும் கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள், பன்றியின் உடலை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அங்கு கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சேக்பரீத், பாறைப்பட்டி.

மேலும் செய்திகள்