மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் பகுதியில் மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2021-11-10 18:17 GMT
கொடைக்கானல்: 

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரியும், பலமுறை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

 அதேபோல நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி வரை சாரல் மழை பெய்தது. பின்னர் மழை குறைந்து காலை 10 மணி அளவில் வெயில் அடித்தது. கனமழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்ததால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இருந்தது. பகல் நேரத்தில் நிலவிய இதமான தட்பவெப்ப நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்