கொரோனாவால் 11 பேர் பாதிப்பு

கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-11-10 18:12 GMT
மதுரை,
மதுரையில் கொரோனாவால் நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதில் 8 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மதுரையில் இது வரை 74 ஆயிரத்து 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் தற்போது ஆஸ்பத்திரியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்