பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த 5-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஆர்வமுடன் காப்பு கட்டி கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்காததால் பக்தர்கள் இன்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருக்கல்யாணம்
இதை தொடர்ந்து பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில் காலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை.
இதற்கிடையில் நிகழ்ச்சி முடிந்ததும் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து நேற்று திருக் கல்யா ணம் நடந்தது. இதில் சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதேஸ்வரன் (பொறுப்பு) மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.