வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு

வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு

Update: 2021-11-10 17:33 GMT
பொள்ளாச்சி

வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து தீயணைப்பு துறையினர்  விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்

வடகிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ள சேதங்களை தடுப்பது பொள்ளாச்சி பஸ் நிலையம், முக்கிய இடங்களில் குறித்து தீயணைப்பு துறை நிலைய அதிகாரி (போக்குவரத்து) பிரபாகரன் தலைமையில் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். 

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

மழைநீர் செல்லும் பாதையை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இடி, மின்னலின் போது செல்போன் பயன்படுத்தவோ, மரங் களின் கீழே நிற்கவோ கூடாது. வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும். 

முயற்சி செய்யக்கூடாது

தெரியாத ஆழமும், நீரோட்டமும் உள்ள வெள்ளநீரை கடக்க முயற்சி செய்யக்கூடாது. கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக கையில் குச்சியை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் வெள்ளத்தின் ஆழம் மற்றும் மண்ணின் உறுதி தன்மையை தெரிந்து கொள்ள முடியும். 

மேலும் வெள்ள நீரில் சிக்கியவரின் அருகில் செல்ல கூடாது. நீண்ட கயிறு அல்லது குச்சியை அவருக்கு அருகில் வீசி அதை பிடிக்க செய்து, அவரை மெதுவாக கரைக்கு இழுத்து வர வேண்டும். ஆழம் குறைவான வெள்ள நீரினை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கயிற்றினை இருபுறமும் கட்டிக் கொண்டு, ஒருவர் பின் ஒருவராக கடக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்