சாத்தான்குளம், கட்டாரிமங்கலம் கோவில்களில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது

சாத்தான்குளம், கட்டாரிமங்கலம் கோவில்களில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது

Update: 2021-11-10 15:56 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம், கட்டாரிமங்கலம் கோவில்களில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது. இதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம்கோவில்
சாத்தான்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவ.4-ஆம்தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் படித்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஸ்ரீமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்தசஷ்டியையொட்டி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கட்டாரிமங்கலம் கோவில்
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள். சிறப்பு அலங்கார பூஜை, ஸ்ரீசுப்பிரமணியர், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்