கோத்தகிரியில் பலத்த மழை வீடு இடிந்து விழுந்தது
கோத்தகிரியில் பலத்த மழை வீடு இடிந்து விழுந்தது
கோத்தகிரி
கோத்தகிரியில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கணவன்-மனைவி உயிர்தப்பினார்கள்.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர், பந்தலூர், கூடலுர் ஆகிய பகுதிகளில் நல்லமழை அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. விடிய-விடிய பெய்த மழை காரணாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக மழையோடு மூடுபனியும் இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.
வீடு இடிந்தது
கோத்தகிரி அருகே உள்ள தேனாடு கீழ்ஹட்டியைச் சேர்ந்த ஜெயராமன். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கனமழையால் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் இருந்து ஜெயராமன் மற்றும் அவரின் மனைவி ஜிக்கி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் திலகவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீடு இடிந்ததை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.