குன்னூரில் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

குன்னூரில் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

Update: 2021-11-10 12:33 GMT
குன்னூர்

குன்னூர் மவுண்ட் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் அனுமதி பெற்ற பார், திருமண வரவேற்பு கூடம், கூட்ட அரங்கு போன்றவை உள்ளன. இந்த ஓட்டலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகிறார்கள் இந்தநிலையில் ஓட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது. 

மேலும் ஓட்டலுக்கு வருபவர்கள் முக கவசம் போன்றவற்றை அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல், மதுபார், திருமண வரவேற்பு கூடம் போன்றவை சீல் வைத்து கிருமி நாசினி தெளித்தனர். கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்