ஓசூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் கடைக்காரர் கைது

ஓசூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-10 04:47 GMT
ஓசூர்:
ஓசூர் எம்.ஜி. ரோட்டில் கடை நடத்தி வருபவர் சல்வராம் (வயது 33). இவர், புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று போலீசார், அவருடைய கடை மற்றும் அவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள 54 கிலோ புகையிலை பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சல்வராமை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்