வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி திருவிழா
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதியன்று தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை வாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியினை காண்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் வளாகத்தின் வெளியே இருந்தபடியே பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
திருக்கல்யாணம்
தொடர்ந்து வாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
விழாவையொட்டி நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
அதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.