கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி போலீசார் நத்தம் பிரிவு சாலையில் ரோந்து சென்ற போது கொட்டாம்பட்டியை சேர்ந்த தங்கம் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல கொட்டாம்பட்டியில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற மாதவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.