புதிதாக 2 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-11-09 19:41 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 6 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 37 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 632 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்