வாடிப்பட்டி,
வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நீரேத்தான் நாட்டாமைகாரர் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் தாதம்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவர் தடைசெய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 18 ஆயிரத்து 200 ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கண்ணனையும் கைது செய்தனர்.