300 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
திருவெறும்பூர் மற்றும் அந்தநல்லூர் வட்டாரத்தில் சுமார் 300 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான நிலக்கடலை பயிர்களும் சேதம் அடைந்தன.
திருச்சி, நவ.10-
திருவெறும்பூர் மற்றும் அந்தநல்லூர் வட்டாரத்தில் சுமார் 300 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான நிலக்கடலை பயிர்களும் சேதம் அடைந்தன.
தொடர் மழை
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மழை பொழிவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் மழை தண்ணீரால் சூழ்ந்து சேதமடைந்து வருகிறது. குறிப்பாக திருவெறும்பூர் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியத்தில் சுமார் 100 ஏக்கர் சம்பா நெல் நாற்றுகள், நடவு செய்யப்பட்டு, வெள்ளத்தில் மூழ்கியதால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக வேளாண் நிபுணர்கள் கூறினாலும், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் பருவகால சாகுபடி முற்றிலும் அழிந்துவிடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
300 ஏக்கர் மூழ்கியது
திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள அரசங்குடி, கிளியூர், பத்தளம்பேட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது துளிர் விட்டு வளரும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வடிய வழியின்றி நிற்கிறது. சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. தற்போது தண்ணீர் வடிய தொடங்கி விட்டாலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் அவை வடிய வழியின்றி அப்படியே நிற்கிறது. இதுபோல அந்தநல்லூர் வட்டாரத்தில் உள்ள கொடியாலம், புலிவலம் உள்ளிட்ட இடங்களில் 250 ஏக்கர் நெல் பயிர்களில் நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று அவை வடிய தொடங்கியதால் தற்போது 50 ஏக்கரில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் தெரிவித்தார். ஆக இரு வட்டாரங்களில் சுமார் 300 ஏக்கர் நெல் சாகுபடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அறுவடை நிலக்கடலை சேதம்
மேலும் தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம், வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய வட்டாரங்களில் மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழையால் அவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். சில இடங்களில் செடிகளிலேயே நிலக்கடலை முளைவிட தொடங்கி இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மானாவாரி பயிர்கள் 5 முதல் 10 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மணப்பாறை வட்டாரத்தில் டி.என்.பி.எல். (காகித ஆலை) அருகே சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அங்கு தண்ணீர் வடிய வழியின்றி இருப்பதால் அப்பயிர்களை காப்பாற்றுவது கடினமானது என்றும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தி சேதத்தை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்புகளே காரணம்
மழைநீர் வயல்வெளிகளில் தேங்குவதற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும், பல இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் கடுமையாக தண்ணீர் தேங்கியுள்ளது. கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வழியின்றி உள்ளது. இதனால், சமீபத்தில் நடவு செய்யப்பட்ட பல நூறு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாசனக் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உய்யகொண்டான், கட்டளை வாய்க்கால் கரைகள் அரிப்புக்கு ஆளாகியுள்ளன’’ என்றனர்.
கலெக்டர் நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் மழையால் சேதமான பகுதிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்து பார்வையிட்டார். எடமலைப்பட்டி புதூர் வழியாக செல்லும் கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும், பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அவற்றை நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சிக்குட்பட்ட புலிவலம் கிராமத்தில் மழை தண்ணீர் தேங்கி உள்ள நெல் வயல்களையும் கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் பார்வையிட்டார். அவருடன் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் மற்றும் அதிகாரிகளும், விவசாயிகளும் உடன் சென்றிருந்தனர்.
பெரிய குளம் கண்மாய்
திருச்சி இனாம்மாத்தூரில் உள்ள பெரியகுளம் 76 ஏக்கர் கொண்டது. இந்த கண்மாய் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, பெய்த மழையால் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுப்புத்தூர் அருகே உள்ள ராசிகளம் கோவில் பகுதியில் பலத்த மழையால் பல ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.