மது விற்ற 2 பேர் சிக்கினர்

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-09 18:50 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதகுட்டி, துரை ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தருவை அருகே நின்று கொண்டிருந்த கோபாலசமுத்திரம் செங்குளம் காலனியை சேர்ந்த வள்ளிநாயகம் (வயது 43), ஆவுடையம்மாள்புரம் காலனியை சேர்ந்த முனீஸ்வரன் (23) ஆகியோர் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்