ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-09 18:31 GMT
ராமநாதபுரம்,

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முல்லை பெரியாறு விவகாரம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் உத்தரவின்பேரில் முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். 
அ.தி.மு.க.சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய செயலாளர் அசோக் குமார், முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன்பிரபாகரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், துணை செயலாளர் மருதுபாண்டியன், முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளர் எஸ்.கே.ஜி.செல்வராஜ், ராம்கோ துணை தலைவர் சுரேஷ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள்மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ெஜயசங்கரன்,அ.தி.மு.க. நிர்வாகி பெருங்குளம் ஜானகிராமன்    உள்பட பலர் கொட்டும் மழையில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உரிமையை விட்டு கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்