தொடர் மழை காரணமாக பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

பொய்கை வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

Update: 2021-11-09 18:27 GMT
அணைக்கட்டு
 
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கைபகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. சந்தைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விலை உயர்ந்த கறவை மாடுகள், வண்டி மாடுகள், ஏர் உழும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரத்திற்கு சுமார் 2 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சந்தை கூடும் இடம் தண்ணீர் தேங்கி குளம் போல் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் நேற்று விற்பனைக்காக வந்த கால்நடைகளை நிறுத்தி வைக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர். குறைந்த அளவே மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வியாபாரிகள் சரிவர வராததால் மதியம் ஒரு மணி வரை மட்டுமே சந்தை நடைபெற்றது.

மேலும் செய்திகள்