மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

வாலாஜா அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-09 18:10 GMT
வாலாஜா

வாலாஜா அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). 

இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். 

இதுகுறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். 

விசாரணை அவர்கள் போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (32), பாணாவரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயபால் (37) என்பதும்,  வாலாஜா அருகே இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்