வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்

Update: 2021-11-09 16:52 GMT
சங்கராபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சுரேஷ்(வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன் தனது நண்பர்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் கல்வராயன் மலைக்கு வந்தான். பின்னர் அங்குள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றபோது சுரேஷ் வழுக்கி விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான். 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ரமேஷ்குமார், சக்திவேல் தலைமையில் 11 பேரை கொண்ட குழுவினர் மற்றும் போலீசார் சுரேசை தேடினர். தொடர்ந்து இவர்கள் நேற்று 3-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால், ஆபரேட்டர் கார்த்திகேயன் ஆகியோர் பாச்சேரி பகுதிகளில் ‘டிரோன்’ மூலம் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்