தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-09 14:15 GMT
கோவை

தபால்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், டி.ஏ. நிலுவை தொகையை வழங்க வேண்டும், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதுடன், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

அனைத்திந்திய தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில், கோவை குட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் என்.சிவசண்முகம், முப்திமுகமது, கோகுல் கிருஷ்ணன், செந்தில்குமார், சத்தீஷ், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்