ஊட்டியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
அனைத்து வணிக திட்டங்களுக்கும் நடைமுறை சாத்தியமில்லாத இலக்குகள் நிர்ணயித்து ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை நிறுத்த வேண்டும், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 18 மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.