மோட்டார் சைக்கிள்களை தள்ளி சென்று போராட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் சைக்கிள்களை தள்ளி சென்று போராடடம் நடத்தினர்.;
திண்டுக்கல்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலை-மெங்கில்ஸ் சாலை சந்திப்பில் இருந்து மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன் தலைமையிலான நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.
இதில் மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பாலாஜி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், நிர்வாகிகள் சிலம்பரசன், நிருபன்போஸ் கலந்து கொண்டனர்.
மேலும் ஊர்வலத்தின் போது பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதை குறிக்கும் வகையில் வாலிபர் சங்கத்தினர் கொட்டும் மழையில் மோட்டார் சைக்கிள்களை தள்ளியபடி சென்றனர்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இந்த ஊர்வலத்தின் இறுதியில் பஸ் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அங்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.