தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-08 21:02 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா(வயது 45). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து லதா உடையார்பாளையத்தில் உள்ள தனது அண்ணன் ரவி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக லதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்