பரிசுத் தொகையை தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது
பரிசுத் தொகையை தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
திருச்சி
திருச்சி உறையூர் சாலை ரோட்டை சேர்ந்தவர் மணவாளன் (வயது 52). இவர் திருச்சி உறையூர் நவாப்தோட்டம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55), வாத்துக்கார தெருவைச் சேர்ந்த செந்தில்குமரன் (39) ஆகியோரிடம் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அந்த டிக்கெட்டுக்கு ரூ.1,000 பரிசு விழுந்தது. அதனை மணவாளன் கேட்டுள்ளார். அப்போது அவருக்கு ரூ.200 பரிசு தொகை மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகை ரூ.800-ஐ கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து உறையூர் போலீசில் மணவாளன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரன், ராமலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற தொகை ரூ.230 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல திருச்சி கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரிய கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பெரியகடைவீதி ராணி தெருவைச் சேர்ந்த ராஜா என்ற ஒல்லி ராஜாவை(41) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.120 பறிமுதல் செய்யப்பட்டது.