கல்லூரி பஸ் மோதி முதியவர் படுகாயம்
சிங்கம்புணரியில் கல்லூரி பஸ் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (வயது 68). இவர் குடை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திண்டுக்கல் சாலை கிருங்காக்கோட்டை விலக்கு அருகே நடந்த சென்ற போது அந்த வழியாக வந்த கல்லூரி பஸ், இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி பஸ்சை ஓட்டிய வீரணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.