ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-08 18:50 GMT
விருதுநகர், 
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க விருதுநகர் வட்ட கிளையினர் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகதீசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். 
போராட்டத்தின் போது திருத்திய ஓய்வூதியம் பரிந்துரைகளை உள்ளாட்சி நிதி தணிக்கை குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தியும், விடுப்பு ஒப்படைப்பு, விடுப்பு ஊதியம் வழங்க கோரியும், வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக சங்க துணை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். பொருளாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்