சட்டவிரோதமாக பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சி ராமலிங்காபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு திரி பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 50 கிலோ பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.