விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 58 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.