கரூர்
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில், பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.