சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்
சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்;
கோவை
கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழை, பாலம் வேலை காரணமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உக்கடம் ஆத்துப்பாலம் சாலையை கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் 4 பேர் சேர்ந்து சாலையை சீரமைத்தனர். அவர்கள், ரோட்டில் குண்டும், குழியுமான இடங்களில் மண்வெட்டியால் மண்ணை அள்ளி போட்டு சமன்படுத்தினர்.
இதை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், சாலையை சீரமைத்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதே போல் 95-வது வார்டு போத்தனூர் ரோட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போலீசாருடன் இணைந்து சீரமைத்தனர்.