சூதாடிய 20 பேர் கைது
சூதாடிய 20 பேர் கைது-10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி:
மத்திகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த ரவி (40), ராமன் (34), வெங்கடசாமி (54) உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 260 மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவேரிப்பட்டணம் போலீசார் இந்திராநகர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 2 பேரையும், பாரூர் போலீசார் 3 பேரையும், நாகரசம்பட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.