நாமக்கல்லில் டிப்ளமோ என்ஜீனியர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் டிப்ளமோ என்ஜீனியர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல், நவ.9-
நாமக்கல்லில் டிப்ளமோ என்ஜீனியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல்
நாமக்கல் நடராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் தனுசுராம் (வயது 19). டிப்ளமோ என்ஜீனியரிங் முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். தனுசுராம் தனது உறவினர் ஒருவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இதற்கு 2 பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக கூறியதாக தெரிகிறது.
ஆனால் மனமுடைந்த நிலையில் தனசுராம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தனுசுராமை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர்.
விசாரணை
இருப்பினும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அங்கு, தனுசுராம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் தனுசுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.