திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கபில் என்ற வாலிபர் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-11-08 12:12 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரம் அரசு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கபில் (வயது 33). என்ற வாலிபர் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்